முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் போட்டி தொடரில் இருந்து வங்கதேச அணி முதல் அணியாக வெளியேறியுள்ளது.

நவி மும்பையில்... 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன. நவி மும்பையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்; 48.4 ஓவர்களில் 203 ரன்களை குவித்து இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்படியாக, இலங்கை அணியின் வீராங்கனை ஹாசினி பெரேரா 85 ரன்களும், சாமாரி அத்தபத்து 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சாமாரி அபாரம்...

இதனைத் தொடர்ந்து, விளையாடிய வங்கதேச அணியின் வீராங்கனைகள் நிகார் சுல்தானா (77) மற்றும் ஷார்மின் அக்தர் (64) ஆகியோர் அரை சதங்கள் அடித்து அசத்தினர். இருப்பினும், இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை எடுத்து வங்கதேச அணி தோல்வியடைந்தது. இலங்கையின் பந்துவீச்சாளர் சாமாரி அதிகப்படியாக 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த தோல்வியினால், வங்கதேச அணி உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து