Idhayam Matrimony

ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      உலகம்
Japan 2025-10-19

Source: provided

டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, சனே டகைச்சி புதிய அமைச்சரவையை உருவாக்க உள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் வகையில் அவரது அமைச்சரவை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்​டிபி) தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி கடந்த மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. சனேடகைச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனேடகைச்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து