முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கேப்டன் வேதனை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார். இங்கிலாந்து அணியுடனான போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதயம் உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 284/6 ரன்கள் எடுக்க, இந்திய அணி 288/8 ரன்களே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துடன் தோல்வியைச் சந்தித்தது.  தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. இது குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது: ஸ்மிருதியின் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும் எங்களுக்கு அதிகமான பேட்டர்கள் இருக்கிறார்கள். எப்படி ஆட்டம் மாறியதென தெரியவில்லை, இங்கிலாந்துக்கு வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். தொடர்ச்சியாக விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்தத் தோல்வி மோசமான உணர்வைத் தருகிறது. 

கடினமாக உழைத்து, அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தோம். ஆனால், கடைசி 5-6 ஓவர்கள் திட்டமிட்டபடி செல்லவில்லை. இது மிகவும் மோசமானது. நிச்சயமாக இதயம் நொறுங்கிய உணர்வுதான். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்; விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் கடைசியான கோட்டை தாண்டியாக வேண்டும். ஏனெனில் கடைசி மூன்று போட்டிகளுமே நன்றாக விளையாடியும் தோற்றோம். முக்கியமான அடுத்த போட்டியில் அந்தக் கோட்டினை தாண்டுவோம் என நம்புகிறேன் என்றார். 

_____________________________________________________________________________________________

7 விக்கெட் வீழ்த்திய மகாராஜ்

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. இதில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

_____________________________________________________________________________________________

மிட்செல்லுக்கு குவியும் வாழ்த்து

ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது 34-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். மிட்செல் மார்ஷ் சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பெர்த் நகரில் பிறந்தவர். வலதுகை பேட்டரான இவர் ஆஸி. அணிக்கு வெள்ளைப் பந்தில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர்களில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவுடன் விளையாடி வருகிறது. கடந்த ஆகஸ்டில் இருந்து மிட்செல் மார்ஷ் 13, 22, 54, 88, 18, 100, 85, 9*, 103*, 46* என ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். சராசரி 76.9ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

_____________________________________________________________________________________________

பாகிஸ்தான் வீரர் சாதனை

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆசிப் அஃப்ரிடி, தனது 39-ஆவது வயதில் அறிமுகமாகி இரண்டாவது வயதான வீரர என்ற சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் மிரன் பக்‌ஷா இந்தியாவுக்கு எதிராக 47ஆவது வயதில் அறிமுகமாகி முதலிடத்தில் இருக்கிறார். முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் தற்போது ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதில் ஆசிப் அஃப்ரிடி விளையாடுகிறார். ஆசிப் அஃப்ரிடி கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதினால் ஆறு மாதம் விளையாட தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நோமன் அலி, சஜித் கான் இவர்களுடன் ஆசிப் அஃப்ரிடியும் சேர்ந்தால் பலமான சுழல்பந்துவீச்சாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

_____________________________________________________________________________________________

ரோகித்தை மிரட்டிய மிட்செல் 

உலகின் மிக வேகமான பந்தை ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு எதிராக இந்தப் பந்தை வீசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது. முதல் ஓவரில் முதல் பந்தை ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவின் ரோகித் சர்மாவுக்கு வீசினார்.

இந்தப் பந்தின் வேகம் 176.5கி.மீ/ மணி வேகம் என வேகத்தக் காட்டும் கருவியில் காட்டியது. உண்மையில் ஸ்டார்க் இவ்வளவு வேகமாக வீசினாரா? வேகத்தைக் கணக்கிடும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு எனக் கூறப்படுகிறது. 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் 161.3 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசி முதலிடத்தில் இருக்கிறார். மழையின் காரணமாக 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி மோசமாக பேட்டிங் விளையாடி 136/9 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க் 6 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து விராட் கோலியின் விக்கெட் எடுத்தார். 

_____________________________________________________________________________________________

ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது. மழையின் காரணமாக போட்டி 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி 136/9 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்தார். டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸி. அணி 21.1 ஓவர்களில் 131/3 ரன்கள் எடுத்து வென்றது. ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப், வாஷிங்டன், அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள். அடுத்த போட்டி அடிலெய்டில் அக்.23-இல் தொடங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து