சங்கரன்கோவிலில் மினிமாரத்தான் போட்டி டிஎஸ்பி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      தூத்துக்குடி
mini marathan

 

சங்கரன்கோவில்,

 

சங்கரன்கோவிலில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

 

சங்கரன்கோவில் தருணா விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மினிமாரத்தான் போட்டி அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது.

 

சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் உள்ள வீரிருப்பு அய்யனார் கோவில் முன்பிருந்து தொடங்கிய போட்டியை காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்று ஓடினர். இந்த போட்டியில் 10வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

மூத்தோர் பிரிவில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்பாள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குணாளன் முதலிடத்தையும்,அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அருண்குமார் 2 ஆவது இடத்தையும், கஜேந்திரகோகுல் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.

 

இளையோர் பிரிவில் ஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.வெற்றிவேல் முதலிடத்தையும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எம்.மாதவன் 2ஆவது இடத்தையும், எஸ்.என்.ஆர்.மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கார்த்திக்குமார் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.

 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சங்கரன்கோவில் கூடைப்பந்து கழகத் தலைவர் கோ.சங்கரநாராயணன், அரசு மருத்துவர் அகிலாண்டபாரதி, முன்னாள் நகராட்சி உறுப்பினர் ஆனந்த், கூடைப்பந்து கழக துணைச் செயலர் பாலசுப்பிரமணியன், மாரித்துரை, உடற்கல்வி இயக்குனர் ச.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பரிசுகள் வழங்கினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: