முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு,கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

 

கடலூர்,

 

கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்டத்தில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் 45 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், விலையில்லா வேட்டி, சேலைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையுரை ஆற்றியபோது தெரிவித்ததாவது,

 

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. இதில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழக அரசு செயல்படுத்தும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் நமது மாவட்டத்தில் 6,36,313 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1126 முழு நேர நியாய விலைக்கடைகள், 282 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் 9 மகளிர் சுய உதவிக்குழு நியாய விலைக்கடைகள் ஆக மொத்தம் 1417 நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இருக்கும்.

 

இதுமட்டுமில்லாமல் பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராமம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் கடலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 6,49,000 பயனாளிகளுக்கு ரூ.16.63 கோடி மதிப்பிலான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், விலையில்லா வேட்டி, சேலைகளையும் பெற்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியோடு இருக்குமாறு கேட்டுக்கொளிறேன் எனத் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட வழங்கல் அலவலர் தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் வே.நந்தகுமார், கடலூர் துணைப்பதிவாளர் நா.தன்ராஜ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago