முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் அருகே ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோவிலில்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

 பெரியகுளம்  பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோவிலில் கூடரை வெல்லும் சீர்விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்கழி மாதம் கூடாரை வெல்லும் சீர்விழாவினை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீவெங்கடாஜபதிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நாமசங்கீர்த்தனத்துடன் உற்சவர் கிருஷ்ண பகவான் ஊர்வலம் தாமரைக்குளம்  முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

மேலும் கோவிலில் பெண்கள் திருப்பாவை பாடல்கள் பாடினர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீவெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு அக்காரை வடிசல்  பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக பராமரிப்பு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்