உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு கலெக்டர் இரா.கஜலட்சுமி நடவடிக்கை

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
collector gajalatchumi

காஞ்சிபுரம்,

 

உத்திரபிரதேசம் மாநிலம், லாலாபூர் கிராமம், க்ச்வா ரோடு, வாரணாசி, சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ராதே ஷ்யாம், வயது 30, த/பெ பத்ரிநாத், என்பவர் 2012ம் ஆண்டு தனது அத்தையைப் பார்க்க 28 கி.மீ தொலைவில் உள்ள மால்வாடி என்ற ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தவறுதலாக ராமேஸ்வரம் ரயிலில் ஏறிவிட்டார். செங்கல்பட்டு வந்தபோது டிக்கட் இல்லாததால் ரயில்வே டிக்கட் பரிசோதகரால் இறக்கி விடப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். 27.02.2016 அன்று புதுப்பட்டினம் பஜாரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீட்புத் திட்டத்தின் கீழ் " லிட்டில் ஹார்ட்ஸ்’ மறுவாழ்வு மையம் எனும் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டு, மனநல காப்பத்தில் பராமரிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டன. அவரது புகைப்படம் மற்றும் விவரங்களை தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு பகிரப்பட்டு அதன் மூலமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும் பழைய நினைவுகள் இல்லாத நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப்பின் நினைவு மீண்டு விவரங்களை அளித்ததின் பேரில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காஞ்சிபுரம் வந்துள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் இரா.கஜலட்சுமி முன்னிலையில் ராதேஷ்யாம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி, மாநில குற்ற ஆவணகாப்பக ஆய்வாளர் தாஹுரா, ‘லிட்டில் ஹார்ட் தொண்டு நிறுவன இயக்குநர் ரீட்டாஅய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.20.55 இலட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களை கலெக்டர் இரா.கஜலட்சுமி வழங்கினார். விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை ரூ.1 லட்சம். பெயர்: க.பாலாஜி த/பெ.கஜபதி, கருங்குழி, மதுராந்தகம் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட 159 குழந்தைகளுக்கு ரூ.18.68 லட்சம் மதிப்பிலான காலிபர் எனப்படும் கால்தாங்கிகள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளுக்கு ரூ.87,000/- மதிப்புள்ள காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள் என மொத்தம் 20.55 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை கலெக்டர் இரா.கஜலட்சுமி வழங்கினார். காலிபர்கள் ஊராட்சி ஒன்றிய வாரியாக குழந்தைகளுக்கு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: