முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடுகபட்டியில் மாநில அளவிலான கோ.சீதையம்மாள் நினைவு கைப்பந்து போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி ஜன 16 பெரியகுளம் அருகே வடுகபட்டியில் 27ம் ஆண்டு மாநில அளவிலான கோ.சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டிகள் நேற்று ஊரக விளையாட்டு மைதானத்தில்  துவங்கியது. இப்போட்டியின் துவக்க விழாவில் வடுகபட்டி அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் சின்னராஜ் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழக ஜெயகாந்தன், முன்னாள் வடுகபட்டி பேரூராட்சி தலைவர் துரைராஜ், பெரியகுளம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடுகபட்டி இளைஞர் விளையாட்டு கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் வரவேற்றார். போட்டிகளை மதுரை ராதா டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் கண்ணன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர்; ராஜேந்திரன், தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழக நிர்வாக பொதுச்செயலாளர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான நாக்-அவுட் முறையில்  போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் தேனி அய்யா அணி, லெட்சுமிபுரம் இளைஞர் கைப்பந்து அணி, வைகை கிளப் அணி, ஆணைமலையான்பட்டி முத்தமிழ் அணி, பெரியகுளம் ஆர்.வி.கே அணி, வடுகபட்டி இளைஞர் விளையாட்டு கழக அணி உள்ளிட்ட அணிகள் பங்கு பெற்றன. இறுதி போட்டியில் தேனி அய்யா கைப்பந்து கழக அணி பெரியகுளம் ஆர்.வி.கே. அணியை 25-23, 25-17 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. பெரியகுளம் ஆர்.வி.கே. அணி இரண்டாம் இடத்தையும், வடுகபட்டி இளைஞர் கைப்பந்து கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. மாலையில் மின்னொளியில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதயக்குமார், கோவிந்தராஜ், பார்த்திபன், மாரியப்பன் உள்ளிட்ட விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago