புன்னைநகர்- வனத்திருப்பதி சீனிவாசபெருமாள் கோவிலில் தைப் பொங்கல் சிறப்பு பூஜைகள்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      தூத்துக்குடி
-

தூத்துக்குடி.

 

நாசரேத் அருகிலுள்ள புன்னைநகர்-வனத்திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெரு மாள்கோவிலில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.நாசரேத் அருகிலுள்ள புன்னைநகர்-வனத்திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை காலை 4 மணிக்கு நடைதிறப்பு, காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், காலை 7 மணிக்கு சிறப்பு அலங்கார சேவை, ஞாயிறுகிழமை மாலை 6.30 மணிக்கு மேல் பரிவேட்டைக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,மாலை 7 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றது. திருநாள் சிறப்பு நாள்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை ஓட்டல் சரவண பவனின் இனிப்பு ரவா கேசரி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்திருப்பதி கோயில் நிறுவனரும் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரருமான பி.ராஐகோபால் அவரது மகன்கள் பி.ஆர்.ஷிவக்குமார்,ஆர்.சர வணன், கோயில் மேலாளர் வசந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: