டாஸ்மாக் கடையை பூட்டிய நேரங்களில் மது விற்ற மூவர் கைது

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      ஈரோடு

டாஸ்மாக் கடை பூட்டப்பட்ட நேரங்களில், தனி நபர்கள் மது விற்பது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், அந்தந்த பகுதி போலீசார், நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம்,62 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு, கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு அரசு பொது கழிப்பிடம் அருகே, மது விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம், 48 குவார்ட்டர் பாட்டில்கள் சிக்கின. டி.என்.பாளையம் நான்காவது வார்டு முள்காட்டில், மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆண்டவன், 35, என்பவரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர். ஆண்டவனிடம், ஒன்பது குவார்ட்டர் பாட்டில் சிக்கியது.ஈரோடு, நாராயணவலசு பஸ் ஸ்டாப் பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்ட, நாராயணவலசு, நசியனூர் ரோட்டை சேர்ந்த சாமிநாதன், 27, சிக்கினார். அவரிடம் ஐந்து குவார்ட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: