எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;- "சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணமானது, இந்தியாவின் 'ககன்யான்' உள்ளிட்ட விண்வெளி திட்டங்களுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவையும், அனுபவத்தையும் அளித்துள்ளது. அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்.
இந்தியாவின் அடுத்த விண்வெளி திட்டம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்திய விண்வெளி வீரர்கள் முதல் முறையாக ஒரு இந்திய விண்கலத்தில் பயணம் செய்வார்கள். இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிர்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.
இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 2035 ஆம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும். மேலும் அதற்கு 'பாரத் விண்வெளி நிலையம்' என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம். சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் உலகிற்கு ஒரு பெரிய செய்தியை அனுப்பி இருக்கிறது. விண்வெளி துறையை பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


