Idhayam Matrimony

தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
Kamal-Thiruma-2025-07-17

சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.

மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ள கமல்ஹாசனை வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் தனது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:- தி.மு.க. தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதி.மு.க.வும், பாஜகவும் இன்னும் முரன்பாடாக தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை; கூட்டணியை உருவாக்குகிற முயற்சியிலும் ஈடுபடவில்லை.

தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கிறார்கள். முதல்-அமைச்சர் சொல்வது போல ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் தி.மு.க. கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர்ச்சி பெற முடியும்.

தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. 2026 தேர்தல் இரு துருவ போட்டியாகதான் இருக்கும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அதி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. தி.மு.க., அதி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து