முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      இந்தியா
Akash-Prime-Indian-Army

கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு  வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. 

முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து சோதனை செய்து வருகிறது. பல கட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும். அந்த வகையில், இடி-எல்.டி.எச்.சி.எம். ஹைபர்சோனிக் ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

இந்த நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த ஆகாஷ் பிரைம் சோதனை லடாக்கில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடைபெற்றது.

சோதனையின் போது இலக்குகளை துல்லியமாக ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும், சவாலான தட்பவெப்ப நிலையிலும் திறம்பட செயல்படும் வகையில் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை  4,500 மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும் மற்றும் சுமார் 25-30 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து