முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் 28-வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் 28-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை கலெக்டர் முனைவா ;நடராஜன் தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். சாலை பாதுகாப்பு வாரவிழா ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகம் அருகில் போக்குவரத்;துத்துறை மற்றும் காவல்துறையின் சார்பாக, மாவட்ட கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில் 28-வது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. வுpழாவை துவக்கி வைத்து, பொது மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் முன்னிலை வகித்;தார். அதன்பின்பு மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின்அறிவுருத்தலின்படி, பொது மக்களிடையே சாலைப் பயணங்களின் போது பாதுகாப்பான முறையில் பயணித்திட வேண்டுமென்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இவ்வாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17.01.2017 முதல் 23.01.2017 வரையிலான 7 நாட்களை சாலைப்பாதுகாப்பு வாரவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த 7 நாட்களில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையின் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் சாலையில் பயணிக்கும்; மிதமான வேகத்தில் சாலை விதிகளைப் தவறாமல் பின்பற்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும்பொழுது அலைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்;டும். தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், மது அருந்திவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விபத்து மற்றும் அவசர சூழ்நிலையில் மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படுவதோடு, சாலை விபத்துகளில் சிக்கும் வாகனங்களை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த 24 மணிநேரமும் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். விபத்தில்லா மாநிலம் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை தவறாமல் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டி தமிழகத்தினை சாலை விபத்துகள் அற்ற மாநிலமாக உருவாக்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ்.சர்வேஸ்ராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் சரவணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.சேக்முகமது, இயக்கூர்தி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், மாணிக்கம், அருண்குமார் உட்பட போக்குவரத்து மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago