உலிக்கல் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      நீலகிரி

உலிக்கல் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

                                         உறுதிமொழி

பேரூராட்சி செயல் அலுவலர் லி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குப்பைகள் எரித்தலின் தீமைகள், மழைநீர் சேகரிப்பின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் குறித்து செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

                                 மாரத்தான் பந்தயம்

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி வளாகத்தில் மனித சங்கிலி நடத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதேபோன்று அதிகரட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் தலைமையில் புகையில்லா போகி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: