முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

257பேருக்கு மிதிவண்டிகள் :சு.ரவி எம்எல்ஏ. வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

ரக்கோணம் சுற்றியுள்ள மூன்று பள்ளிகளை சேர்ந்த 257 மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லாத மிதிவண்டிகளை சு.ரவி எம்எல்ஏ வழங்கினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதிற்குள் 10-ற்கும் அதிகமான மேனிலை பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான 2016-17 கல்வி ஆண்டு திட்டத்தின் கீழ் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்று வருகிறது.   அதன்படி அரக்கோணம் நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி ப்யுலா சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் கல்யாணி வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.பாபு ஆகியோர் முன்னிலையிலும். அரக்கோணம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் விழாவிற்கு தலைமை ஆசிரியர் ந.மோகன்தாஸ் தலைமையில்      உதவி தலைமை ஆசிரியர் ம.அ.வில்லியம் வரவேற்று பேசினார்.   பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மு.உலகநாதன்;, அதிமுக வட்ட செயலாளர் பழக்கடை ஜெயலா, என்.அமீது, வில்லயம்ஸ், ஆகியோர் முன்னிலையிலும். நிறைவாக அரசு ஆண்கள் ஆதி திராவிடர் நலப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.விஸ்வநாதன் தலைமையில். உதவி தலைமை ஆசிரியர் வி.அசோகன் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.டி.பி.ரமேஷ் முன்னிலையில் 76 மிதிவண்டிகள். ஆக மொத்தம் 257 மிதிவண்டிகளை வழங்கபட்டன.    இவைகள் அனைத்தையும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி பேசிய போது  மாணவர்களான நீங்கள் நன்றாக படிக்க வேண்டும், இதனால் பள்ளிக்கும், அரசிற்கும், தொகுதிக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வாழ்க்கையில் நிங்களும் உயர்ந்த நிலையை அடைவீர்கள் எனவே, நன்கு படியுங்கள் வாழ்த்தி பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago