கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      தூத்துக்குடி
kvp gvn

கோவில்பட்டி

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் “உயர் மதிப்பு பண மதிப்பிறக்கம் மற்றும்; பணமில்லாப் பொருளாதாரம்: இந்திய பொருளாதாரத்தில் அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம்; நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வாக இரண்டாமாண்டு மாணவர் ஜெயநாதன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர்  செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர். ஆதிலட்சுமி தலைமையேற்று தலைமையுரையாற்றினார். சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் பேராசிரியர். கு. வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் பொருளியல் தலைவர் . அமலநாதன் அவர்கள், சாத்தூர் ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் . மதிவானன் மற்றும் கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் கு. வெங்கடாசலபதி கலந்து உரையாற்றினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர் . அமலநாதன் தமது உரையில் உயர் பண மதிப்பிறக்கம் பற்றியும், கணினி மயமாக்கப்படும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி எடுத்துரைத்தார்.         சிறப்பு விருந்தினர் பேராசிரியர். கு. வெங்கடாசலபதி கல்வித்துறையில் கணினி மயமாக்கப்பட்ட பண நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும், இந் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் நெறிமுறைகள் பற்றியும் விளக்கினார்.மற்றுமொரு சிறப்பு விருந்தினர் . மதிவாணன் அவர்கள், உயர் மதிப்பு பண மதிப்பிறக்கத்தில் பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கருத்துரை நிகழ்த்தினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகத்தைச் சார்ந்த 92 மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர். பழனிக்குமார், துறைப்பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: