முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில் நடைபெற்றது

 

 

கலெக்டர் பேச்சு

 

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து தனது நிறுவன நாளான ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டின் மையக் கருத்தாக ‘வாக்காளர் என்பதில் பெருமைகொள்வேன் வாக்களிக்க தயார் என்பேன்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுடைய அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அங்கீகாரம் அளிப்பதாகும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கு கல்வி, ஜாதி போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகுதியும் தேவையில்லை. இதற்கு 18 வயது பூர்த்தியடைந்தாலே போதுமானதாகும்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளிலும், தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள இளைய மற்றும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 25.01.2017 வாக்காளர் தினத்தை கொண்டாடும் போது பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தம் தொடர்பான படிவங்கள் அளிப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். பொது மக்கள் படிவம் 6 பூர்த்தி செய்யும் போது அப்படிவத்தில் உள்ள கலம் 4ல் கடந்த பதிவுகளை எழுத ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 

விளம்பர பதாகைகள்

 

தேசிய வாக்காளர் தினத்தை வலியுறுத்துமாறு அனைத்து அலுவலகங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஊர்வலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தலின் முக்கியத்துவம் மற்றும் தேர்தலின் போது வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வாசகங்களை கல்லூரி மாணவர்கள் கையில் ஏந்தி செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஊர்வலத்தில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

 

 

 

வாக்காளர்கள் அனைவரும் விருப்பு, வெறுப்பு இல்லாமலும், எவ்வித தாக்கங்களுக்கும் ஆட்படாமல் தங்களது சுய விருப்பப்படி வாக்களிப்போம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி, கோட்டாட்சியர்கள் ம.கணே~;குமார் (திருச்சி), ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்) மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சத்தியநாராயணன், ராமசாமி, தேர்தல் வட்டாட்சியர் சுமதி உட்பட அனைத்துத்துறை அலுலவர்களும் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago