முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாயர்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 206 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் முகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் மூலம் சாயர்புரம் போப் கலைக்கல்லூரியில் வைத்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்றன.

வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் எம்.ரவி குமார்  தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 206 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது:-

அதனைத்தொடர்ந்து 17.12.16 அன்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூhயில் வைத்து நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான பலர் வேலைவாய்ப்பை பெற்றனர்.. மேலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள முதலீடுகளுக்கு 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகையில் வேலைவாய்ப்புக்ளை அரசு வழங்குகிறது. எனவே அரசு வழங்கிய இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். - என தெரிவித்தார்.

ஸ்ரீ வைகுண்டம் வட்டம் சாயர்புரத்தில் நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 61 நிறுவனங்கள் பங்குபெற்றன. 1532 பேர் பதிவு செய்துள்ளனர். இம்முகாமில் இன்று மட்டும் 206 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் 572 பேர் முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்படும் அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும்.=முன்னதாக தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் வேலைவாய்;ப்பு முகாமினை துவக்கிவைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் கு.இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) கர்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜராஜன், தாட்கோ மேலாளர் யுவராஜ், போப் கலைக்கல்லூரி செயலர் முனைவர் ஜேசு சகாயம், முதல்வர் முனைவர் செல்வக்குமார், மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன, திருவைகுண்டம் வட்டாச்சியர் செல்வபிரசாத், சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங்,உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்