முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவீரர் நேதாஜி பிறந்தநாள் விழா

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தேசத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா அவரது சிலை வளாகத்தில் நடைபெற்றது. நற்பணி மன்ற செயலாளர் மலரகம் சந்திரன் தலைமை வகித்தார். தாம்பிராஸ் இல.அமுதன், நேதாஜி வே.சுவாமிநாதன், லோகநாதன் முன்னிலை வகித்தனர். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் மாலை அணிவித்துப் பேசுகையில் அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே என்ற இலக்குடன் சுதந்திரப் போரை துணிவு என்ற செயல்திறனுடன் வழிநடத்திய தேசத் தலைவர் நேதாஜி. இன்று அவரது வழியில் தமிழக இளைஞர்களின் களப்பணியை காண முடிகிறது. மக்களால் தேர்ந்தடுக்கப்பட்டவர்களே ஆட்சியை வழிநடத்த வேண்டும்.

நிழல் அதிகார மையங்கள் ஒருபோதும் மக்களால் ஏற்கப்பட மாட்டார்கள் என்பதை தமிழர் போராட்டக்களம் உலகிற்கு சொல்லியுள்ளது. இதுதான் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நேருஜியின் மந்திரச் சொல்லுக்கும் தேசத் தந்தை அண்ணல் காந்திஜியின் நோக்கத்திற்கான வழிமுறை என்றார். நம் தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் நேதாஜி கொண்ட நம்பிக்கைதான் தனக்கு அடுத்த பிறவி இருந்தால் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று அவர் கூறியது. இந்த நாளில் நமது தேசத்தில் உள்ள ஏழ்மையை அகற்றிட, சமூக நீதியை நிலைபெறச் செய்திட நாம் தொடர்ந்து உழைப்போம் என்றார். விழாவில் ஜெ.ரவிசங்கர், அருட்தந்தை ஞா.லூர்துராஜ், ஏ.சி.பாபுலால், தியாகதீபம் அ.பாலு, ரெ.கார்த்திகேயன், கே.அண்ணாமலை, கவிஞர் மீ.இராமசுப்பிரமணியன், வாசகன், மற்றும் சுந்தர், கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, வண்டியூர் மாணிக்கராஜ், தியாகி ரா.பரமசிவம், பி.பன்னீர்செல்வம், சீ.கிருஷ்ணமூர்த்தி, ஜிம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இராம.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்