தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் விநியோக மாவட்ட கண்காணிப்பு மையம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      தர்மபுரி
1 0

தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு மைய அறை மாவட்ட ஊரக வளர்ச்சி மைய முகமை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில்  உயர்கல்வித்துறை அமைச்சர்                              கே.பி. அன்பழகன்  திறந்து வைத்து பொதுமக்களிடையே தெரிவித்ததாவது :- தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை அனைவரும் பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவிலேயே  சிறப்பாக தமிழ்நாடு பெற வேண்டும் என்பது  முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் முக்கிய நோக்கமாகும்.  திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை ஒழிக்க அனைத்து பற்கேற்பாளர்களையும் கொண்ட ஒரு மக்கள் இயக்கத்தின் பல்முனை அணுகுமுறையின் வாயிலாக, திறந்தவெளி மலம்  கழித்தல் பழக்கம்அற்ற மாவட்டமாக தூய்மை தருமபுரி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக மாற்ற கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளின் கழிவறை பழக்கம், உடல் வளர்ச்சி ஆரோக்கியம், அறிவு வளர்ச்;சியின் அடையாளம் மற்றும் திறந்த வெளியல் மலம் கழிப்பதால் வரும் நோய்களான வாந்திஃ வாயிற்றுப்போக்குஃ காலரா,  டைபாய்டு காய்ச்சல், குடற்புழுக்கள், மஞ்சள்காமாலை, இளம்பிள்ளை வாதம் மற்றும் இரத்த சோகை போன்றவை திறந்த வெளியில் மலம் கழிப்பதால் எற்படும் நோய்களாகும்.   நமது மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளும், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும் ஆக மொத்தம் 29 ஊராட்சிகள் திறந்த வெளியல் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக (ழுனுகு ஏடைடயபந) ஆக  தருமபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நமது  மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொது மக்களுக்கு குடிநீர் எவ்விதமான தங்கு தடையின்றி தொடர்ந்து வழங்கிடவும் , அவ்வப்போது ஊராட்சிகளில் ஏதேனும் குடிநீர் பிரச்சினை ஏற்படின் அவற்றினை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய குடிநீர் விநியோக கண்காணிப்பு மையம் தட்டுபாடின்றி பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.காளிதாசன், கோட்டாட்சியர்                              இராமமூர்த்தி, உதவி திட்ட அலுவலர்,(வீடு மற்றும் சுகாதாரம் (பொ)) ஜி.சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.விமலாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: