முன்பதிவு இல்லா ரயில் பயணச் சீட்டுகளை செல்லிடப்பேசி செயலி மூலமாகப் பெறலாம் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு

முன்பதிவு இல்லாத ரயில் பயணச் சீட்டுகளை செல்லிடப்பேசி செயலி மூலமாகப் பெறலாம் என்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளார் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

  ரயில் பயணிகள் தங்கள் செல்லிடப்பேசியில் UT​S​O​N​M​O​B​I​LE எனும் செயலியை நிறுவி, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களான சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் நகரம், ஆத்தூர், சின்ன சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவு அல்லாத பயணச் சீட்டுகளைத் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி இயந்திரம்

 இவ்வாறு செல்லிடப்பேசி மூலமாக முன்பதிவற்ற பயணச் சீட்டுகளைப் பெற, தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் செல்லிடப்பேசியில் UT​S​O​N​M​O​B​I​LE எனும் செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் தங்களது செல்லிடப்பேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  குறைந்தபட்சம் ரூ. 100-க்கு ரயில்வே வாலட் (R-​‌wa‌l‌l‌e‌t-​Ra‌i‌l‌w​a‌y​ Wa‌l‌l‌e‌t) மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரம் மூலமாகத் தங்களது செல்லிடப்பேசி எண் மற்றும் முன்பதிவு எண்ணைப் பதிவு செய்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.   பிரிண்ட் செய்யப்பட்ட பயணச் சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க  அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகளுக்குத் தானியங்கி இயந்திரம் மூலமாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு இல்லா பயணச்சீட்டு அலுவலகத்தையோ w‌w‌w.‌u‌t‌s‌o‌n‌m‌o​b‌i‌l‌e‌i‌n‌d‌r​a‌i‌l.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தையோ அல்லது பயணிகள் உதவி எண் 044-25351621-இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: