திருச்செந்தூரில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறவும், தகுதிசான்று புதுப்பிக்கவும் வந்தவர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்களுக்கும், வாகன ஏஜென்சியினருக்கும் 28வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. வாசன் கண் மருத்துவமனை குழுவினருடன் இணைந்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலத்தினர் நடத்திய இந்த முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் ஓட்டுநர்களுக்கு கண் பார்வையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முகாமில் 120க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 38 பேர்களுக்கு கண்களில் குறைபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டு ஆலோசனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 8 பேர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: