முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் அடிக்கல் நாட்டினார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      கடலூர்

கடலூர்,

 

கடலூர் மாவட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில்; 8800 சதுர மீட்டர் அளவில் புதிதாக கட்டப்படவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்திற்கு, கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

 

தமிழக முதலமைச்சர் அவர்களால் 2016-17-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி, கடலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.=இந்த புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் ஆகிய நான்கு தளங்களை உள்ளடக்கியதாகும்.தரைதளத்தில் முன்கவனிப்பு புற நோயாளிகள் பிரிவு, பின்கவனிப்பு புற நோயாளிகள் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை கூடம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 30 படுக்கைகள் கொண்ட முன்கவனிப்பு வார்டு ஆகியவை அடங்கும்.முதல் தளத்தில் 15 படுக்கைகள் கொண்ட பின்கவனிப்பு வார்டு, 16 படுக்கைகள் கொண்ட நோய் மீள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, 25 படுக்கைகள் கொண்ட அதிதீவீரபிரிவு மற்றும் நான்கு அறுவை சிகிச்சை கூடங்கள் ஆகியவை அடங்கும்.இரண்டாம் தளத்தில் அறுவை கவனிப்பு பிரிவு, 50 படுக்கைகள் கொண்ட பொது வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, 18 படுக்கைகள் கொண்ட அதிதீவிர பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு ஆகியவை அடங்கும்.மூன்றாம் தளத்தில் 28 படுக்கைகள் கொண்ட நோய் மீள் பிரிவு, ஆலோசனைக் கூடம், அவசர இருப்பு அறைகள், உணவு கூடம் மற்றும் மருத்துவர் பயிற்சிக் கூடம் ஆகியவை அடங்கும்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்) டாக்டர் எஸ்.மாதவி, கடலூர் அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் சண்முகக்கனி, பொதுப்பணித்துறை (கட்டிடம்- மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர்கள் ஜி.முரளிதரன், பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் ஜி.சிவகுமார், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆர்.குமரன், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் ஜி.ஜே.குமார், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அலுவலர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்