முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லா மக்களிடமும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்:தி.மலை தொடக்க விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை:எல்லா மக்களிடமும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென திருவண்ணாமலையில் நேற்று நடந்த மனித நேய வாரவிழா தொடக்க விழாவில்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அனைவரையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விழாவை தொடங்கிவைத்து பேசுகையில், முதல் மாற்றம் நமக்குள் வரவேண்டும், அதுதான் மனிதநேயம், சாதாரண விஷயம் தினம் காண வேண்டிய விஷயம் மனித நேயம். மனிதன் முதல் கடமை அடுத்த மனிதருடன் எளிமையாக பேசுவதே மனித நேயம். மனித நேயம் என்பது நாம் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு நல்லுணர்வு ஆகும். அரசு அலுவலர்கள் தங்களை நாடி வரும் பொதுமக்களிடமும், ஆசிரியர்கள் மாணவர்களிடமும் என எல்லா சக மக்களிடமும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன மத சாதி பொருளாதார வேற்றுமைகளை மறந்து சக மனிதனை மனிதனாக பாவித்து அன்பு செலுத்துவதேமனிதநேயமாகும். நம் இளைய சமுதாயத்திடம் மனித நேயத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி வருங்காலத்தில் அவர்கள் மனிதநேயத்துடன் திகழ வாய்ப்பினை நாம் ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பேசுகையில், எல்லா இடமும் மனித நேயம் கடைபிடிப்பதில்லை. நாம் நமது பணியை சரியாக செய்யவேண்டும் அதுவே மனிதநேயம் கடைபிடிப்பதாகும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அன்னை தெரசா போன்றவர்கள் மனிதநேயத்தை கடைபிடித்தவர்களில் முக்கியமானவர்கள். அவர்களின் வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது மனித நேயம் கடைபிடிக்க வேண்டும். அந்த காலத்து அரசர்கள் மனிதநேயம் வளர அனைவரும் தங்க சத்திரம் கட்டிக் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு தண்ணீர் கொடுக்கக்கூட முன்வருவதில்லை. அது வேதனையை அளிக்கிறது. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு மனிதநேயத்தை வளர்க்க ஆசிரியர்கள் கற்று தர வேண்டும் என்றார். விழாவில் பயிற்சி சார் ஆட்சியர்கள் ஜஸ்டின் யாதவ், நிதின் சங்கவன், சிம்ரன்ஜீத் சிங், காலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, தனி வட்டாட்சியர்கள் என்.தீர்த்தமலை, ஜி.வேடியப்பன், டி.அரிதாஸ், விடுதி காப்பாளர்கள் எஸ்.சிவக்குமார், ஆர்.திவாகரன், எம்.ராஜா மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மற்றும்  கலந்து கொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் கே.ஜெயராமன் நன்றி கூறினார் மனித நேய வாரவிழா வருகிற 30ந் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago