முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் நகர ஒன்றியங்களில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் அரசின் சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாசுதேவன், சொ.சண்முகவடிவு, எம்.தனசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் நாடளுமன்ற உறுப்பினா் மரகதம்குமரவேல் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கி அதிமுக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சினுவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 220, இராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 133, சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 101, சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 294, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 431, தண்டபாணி ஒரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் 91 என 1270 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஸ்டாலின் ஒன்றிய செயலாளா் தும்பவனம் டி.ஜிவனந்தம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற செயலாளர் நகர மன்ற துணை தலைவர் ஆா்.டி.பூக்கடை சேகர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago