முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைத்து மாணவ–மாணவிகளை பாராட்டுகிறேன் நடிகர் பரத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் ‘ஹிலாரியோ 17’ என்ற பெயரில் கலைத்திறன் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு திரைப்பட நடிகர் பரத் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாணவ–மாணவிகள் மத்தியில் நடிகர் பரத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–நான் இங்கே உங்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் தமிழன், என் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு எனக்கு வேண்டும் என்று தானாக முன்வந்து போராடிய அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ‘நடிகர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதியாக இருந்தனர்.

 

நான் தமிழன்உணர்வு

 

அதையும் மீறி ஒரு சில நடிகர்கள் மாணவர்களின் மதிப்பை பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமை. 2 நாட்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்றால், அது நான் தமிழன் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே.இங்கே கூடியிருக்கும் மாணவ–மாணவிகளையும், உங்கள் உற்சாகத்தையும் பார்க்கும்போது எனக்கு எனது கல்லூரி நினைவுகள் நினைவுக்கு வருகிறது. நான் முழுமையாக கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போனது.பிளஸ்–1 படிக்கும்போது நன்றாக நடனம் ஆடுவேன் என்பதால் பிளஸ்–2 படிக்கும் வரை நடனப்போட்டிகளுக்கு சென்று பள்ளிக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்து இருக்கிறேன். கல்லூரி முதலாம் ஆண்டு சென்றபோது பாய்ஸ் பட வாய்ப்பு வந்து திரைத்துறைக்கு வந்துவிட்டேன்.இருந்தாலும் அவ்வப்போது இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப்போய் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா? என்று ஏங்கி இருக்கிறேன். நீங்கள் கல்லூரியில் முழுமையாக படிக்கும் வாய்ப்பு பெற்று இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து நன்றாக படியுங்கள்.இவ்வாறு நடிகர் பரத் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்