முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்களில் போலியாக “பிரஸ் ஸ்டிக்கர்’ ஒட்டினால் கடும் நடவடிக்கை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ஈரோடு

வாகனங்களில் போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  பத்திரிகையாளர்கள் தடையின்றி செய்திகளை சேகரிக்கச் செல்லும் வகையில் அவர்களின் வாகனங்களில் பிரஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படும் பிரஸ் அல்லது ஊடகம் என்ற ஸ்டிக்கர்கள் மட்டுமே செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்டி சென்று செய்திகளை சேகரிக்க வேண்டும்.

  ஒரு சில பத்திரிகையாளர்கள் அரசு வழங்கும் ஸ்டிக்கர்களை ஒட்டவில்லையென்றாலும், அவர்களது நிறுவனங்கள் தரும் அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளது.

போலிஸ்டிக்கர்

ஆனால், அண்மைக்காலமாக பிரஸ் ஸ்டிக்கர்களை அச்சு, காட்சி ஊடகங்களில் இல்லாத நபர்கள்கூட போலியாக ஒட்டிக்கொண்டு அதை தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

  இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாகனங்களில் போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் கூறுகையில், பத்திரிகை துறையை சாராத நபர்கள் பிரஸ் ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், போலியாக இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு

 இருப்பதாக கருதப்படுவதால்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பிரஸ் ஸ்டிக்கர்களை போலியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்