சிவகங்கை - இந்தியதிபெத் எல்லை காவல்படையின் பயிற்சியாளர்களின் 24 வாரம் கடினமான பயிற்சி முடித்து 37 கான்ஸ்டபிளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவரான ஆஸ்டின்ஈபன் தலைமையில் நடைபெற்றது. இந்த இளம் வீரர்கள் நாட்டிற்காக தன்னை அற்பணித்து சத்தியபிராமணம் செய்து கொடுத்தார்கள். நிகழ்ச்சியை கான சிவகங்கை மற்றும் மதுரையிலிருந்து ஏரளமானோர்க கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆஸ்டின் ஈபன் கூறியதாவது
இந்தியதிபெத் எல்லை காவல்படை 1962ல் சீனப் போருக்கு பின், இந்தியா சீன எல்லையில் பாதுகாவலுக்காக துவங்கப்பட்டது. முதலாவதாக 4 பட்டாலியை தொடங்கி காவல்படை பின்னர் 60 பட்டாலியனாகவும் மற்றும் 90000 நபர்களையும் கொண்டுள்ளது. இந்திய சீனா எல்லையில் ஜம்மு காஷ்மீரில் காராகோரம் என்ற இடத்திலிலுருந்து அருணாச்சபிரதேசத்திலுள்ள கவர்னர் பவன் தலைமைச் செயலகம் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் 04 கண்சுலேட்ற்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்தியதிபெத் எல்லை காவல்படை இந்தியாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. இளம் வீரர்களிடம் இந்திய நாட்டிற்கு விசுவாசத்துடன் வீரத்துடனும் பணிபுரிந்து இந்தியதிபெத் எல்லை காவல்படையின் பெயரை உயரச் செய்ய வேண்டும் என்றார்.
பரிசுகளும் பாராட்டுகளும்
மேலும் பயிற்சியின்போது பயிற்சிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் அஜய், குல்தீப், தரம்வீர், ஆனந்தகுமார், ஆனந்த பிரகாஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆஸ்டின் ஈபன் அவர்களுக்கு திருமதி நான்சி ஆஸ்டின் முதன்மை மருத்துவ அதிகாரி கமாண்டன்ட் நினைவு பரிசு வழங்கினார். கூடுதல் கமாண்டன்ட் சிறப்பு விருந்தினரையும் மற்றவர்களையும் வரவேற்றார். இந்த அணிவகுப்பு வீரர்களுக்கு மிக துல்லியமான உடற்பயிற்சியும், ஆயுதங்கள் கையாளுதல், காவல் நுனுக்கங்கள் , சட்டம், காலத்திற்கு ஏற்றவாறு தங்களையும் இடத்தை மாற்றிக் கொண்டு பேரிடுதல் அணிவகுப்பு மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளையும் இந்த அணிவகுப்பின் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மதுரை புறநர் காவல் பேண்டும் கலங்து கொண்டனர். இறுதியாக சோலைராஜ் நன்றி கூறினார்.