Idhayam Matrimony

'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      இந்தியா
Delhi-Airport

Source: provided

புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.

சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு கடந்த 2024ம் ஆண்டில் உலகின் 20 'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலை தயாரித்துள்ளது. இப்பட்டியலில் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 10,80,67,776 பேரை கையாண்டுள்ளது. 2வது இடத்தில் துபாய் விமான நிலையமும் (9,23,31,506 பயணிகளை கையாண்டுள்ளது) 3வது இடத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையம் (8,78,17,864 பயணிகளை கையாண்டு) உள்ளது.

டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 7,78,20,834 பயணிகளை கையாண்டு 9 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, 10 வது இடத்தில் இருந்த இந்த விமான நிலையம் தற்போது 8 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  ஜப்பானின் ஹனிடா விமான நிலையம் 4வது இடத்திலும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள் ஹீத்ரோ விமான நிலையம் 5வது இடத்திலும் அமெரிக்காவின் டென்வர் விமான நிலையம் 6வது இடத்திலும், துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 7 வது இடத்திலும் அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையம் 8 வது இடத்திலும் , சீனாவின் ஷாங்காய் விமான நிலையம் 10வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் 6 விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

இது தொடர்பாக சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச அளவில், 940 கோடி பேர் விமானங்களில் பயணித்துள்ளனர். இதில், முதல் 20 இடங்களில் இருக்கும் விமானங்கள் மட்டும் 15.4 கோடி பயணிகளை கையாண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து