தூய அந்திரேயர் பள்ளி மாணவர்களுக்குசைக்கிள்கள்: ரவி எம்எல்ஏ வழங்கினார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      வேலூர்

அரக்கோணத்தில் தூய அந்திரேயர் மேனிpலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை; சு.ரவி எம்எல்ஏ வழங்கினார்இது குறித்து விவரம் வருமாறு.     வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தூய அந்திரேயர் மேனிநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் பதினோராம் வகுப்பு 351 மாணவ, மாணவியர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று வியாழன்கிழமை மாலை பள்ளி வகுப்பரையில் நடைபெற்றது.   இந்த விழாவிற்கு வந்திருந்தவர்களை உதவி தலைமை ஆசிரியர் ஏசுபாதம் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோன் ஜெஸ்டின் சாமுவேல் தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 351 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசினார். அவர் பேசிய போது கூறியதாவது.    நமது தொகுதியில் நடைபெறும் கடைசி சைக்கிள் வழங்கும் விழா இதுவாகும். ஏனெனில், தொகுதியில் மொத்தம் 15 மேனிலைப் பள்ளிகள் உள்ளது. சட்ட மன்ற கூட்டத் தொடரால் உங்களுக்கும் முன்னதாகவே வழங்க முடியாமல் போனது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றுமே மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.     அதனாலே மாணவர்களை இரு கண்களாக பாவித்தார். அதாவது நல்ல ஆரோக்கிததுடன் இருக்க வேண்டும். அதே போல் கல்வியிலும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதாகும். எனவே, நீங்கள் நன்கு படித்து பள்ளிக்கும், நம்முடைய தொகுதிக்கும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடும் முயற்சிக்கும் பலன் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சு.ரவி எம்எல்ஏ பேசினார். நிகழ்வில் வளர்புரம் வங்கி இயக்குனர் முத்தபன், பரித்தபுத்தூர் அன்பு, என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் அற்புதராஜ், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராபர்ட்,  பள்ளி உடற் கல்வி இயக்குனர்; சர்மில் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் முதுகலை ஆசிரியர் இன்பாசெல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: