முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2428 பயனாளிகளுக்கு 1கோடியே 9லட்சத்து 27ஆயிரத்து 130 ரூபாய் நிவாரண உதவி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

மாதர்பாக்கம் மற்றும் ஈகுவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பாக வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 2426 விவசாயிகளுக்கு 1கோடியே 9லட்சத்து 27ஆயிரத்து 130 ரூபாய் நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாதர்பாக்கம், பாதிரிவேடு, கண்ணம்பாக்கம், பல்லவாடா, மாநெல்லூர், நேமள்ளூர், செதில்பாக்கம், கண்ணன்கோட்டை, சிறுவாடா. பூதூர் ஆகிய பகுதிகளில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 2400விவசாயிகளுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி வழங்கும் விழா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.சந்திரன் தலைமை தாங்கினார்.

 

செயலாளர் நடேசன். துணை தலைவர் டேவிட்குமார், இயக்குனர் டேவிட் சுதாகர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷியாமளா தன்ராஜ், லோகாம்பாள் கருணாகரன், ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார், நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 2400 விவசாயிகளுக்கு 1கோடியே 5 லட்சத்து 7ஆயிரத்து 130ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.

 

அதே போல கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயந்தி சுரேஷ்ராஜ், செயலாளர் திருமலை, துணை தலைவர் தைரியநாதன், இயக்குனர் எஸ்.எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் 28 பயனாளிகளுக்கு 4லட்சத்து 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை நிவாரண உதவியாக வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்