அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து கலெக்டர் டி.பி.ராஜேஷ் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கடலூர்

கடலூர்.

 

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கலந்து கொண்டு ஏழை மக்களோடு அமர்ந்து அறுசுவை உணவருந்தினார்.

 

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் அனைவரும் சமம் என்ற கருத்தின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் நகரில் மைய பகுதியில் உள்ள அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுவிருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், ஏழை எளிய மக்களுடன் ஜாதி சமய பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தார்.இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: