முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளின் குடிநீர் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், முத்தூர், கன்னிவாடி மற்றும் குளத்துப்பாளையம்  ஆகிய  பேரூராட்சிப் பகுதிகளின்  குடிநீர்  மற்றும்  பிற  துறைகளின் வளர்ச்சி  திட்டப்  பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில்  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்   தலைமையில் நேற்று (04.02.2017) நடைபெற்றது.

அமைச்சர் ஆய்வு

 

               இக்கூட்டத்தில், மூலனூர், முத்தூர், கன்னிவாடி மற்றும் குளத்துப்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாக  அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார்.  மேலும்,  பருவ மழை பொய்த்து விட்ட நிலையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீரினை எவ்வாறு வழங்குவது மற்றும் ஆழ்துளை கிணறுகளை சரிசெய்வது மற்றும்  மின்சாரம்,  சாலை வசதிகள்  போன்ற பொதுமக்களின் அடிப்படை தேவைகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து  அனைத்து அலுவலர்களும் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளவும்,  மறைந்தும், மறையாமலும் மக்கள் மனதில்   வாழ்ந்து கொண்டிருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் மக்கள் நல திட்டங்களுக்கு சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், பேரூராட்சிப் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட அனைத்து அலுவலர்களுக்கு  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  அறிவுறுத்தினாhகள்.

          இந்நிகழ்வின்போது தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ்பச்சாவு  காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பெரியசாமி, வட்டாட்சியர்கள் கிருஷ்ணவேனி(தாராபுரம்), வெங்கடலட்சுமி (காங்கயம்), துணை கலெக்டர்கள், முன்னாள் உள்ளாட்சி  அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்