முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்றவெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      நீலகிரி

அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

                                        சுற்றுலா பயணி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச்சரகத்திற்கு 

உட்பட்ட மண்ராடியார் வனப்பகுதிக்குள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வந்த வனக்காப்பாளர் ரமேஷ், வேட்டை தடுப்பு காவலர் நாசபூசம்வனம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை பிடித்து விசாரணைக்காக வனச்சரகர் மாரியப்பனிடம் ஒப்படைத்தனர்.

                    ரூ.20 ஆயிரம் அபராதம்

விசாரணையில் அவரது பெயர் மெயன்ரட் பெர்டோல்ட் என்பதும். அவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்ததும், அங்கிருந்து பைக்கில் வனப்பகுதிக்குள் சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்ற குற்றத்திற்காக அந்த நபருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்தனர். அபராதத்தொகையை செலுத்தியதை தொடர்ந்து அவரையும், அவரது பைக்கையும் வனத்துறையினர் விடுவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்