திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
tcr3

திருச்செந்தூர்,

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்;று தைப்பூசத்திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று தைப்பூசத்திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு திருக்கோவலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் வந்தடைந்தார். தைப்பூசத்திருவிழாவை யொட்டி முருகனை தரிசிக்க தமிழகமெங்கும் இருந்து பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன்;;, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு பணி டிஎஸ்பி ராமராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணன், ஆடிவேல் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: