Idhayam Matrimony

சோழங்குணத்தில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகேயுள்ள சோழங்குணம் என்று அழைக்கப்படும் சோழன் ஏகன் குன்றம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. அங்கு ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் "புலிக்குத்திப்பட்டான்" நடுகல் ஒன்றும் புலிகளை உயிருடன் பிடிக்கப்பயன்பட்ட பழங்காலத்தில் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட "புலிப்பொறி" ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், மன்ற செயலர் அண்ணமங்கலம் முனுசாமி, மன்ற உறுப்பினர் முத்தரசு ஆகியோர் கள ஆய்வு செய்யும்போது கண்ணன் கோணார், கிரு~;ணன் கோணார், ராஜி கோணார் ஆகியோர் நிலத்திற்கருகில் உள்ள சிறிய குன்றின் அடிவாரத்தில் தரைப்பகுதியில் சுமார் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "புலிக்குத்திப்பட்டான்" நடுகல் ஒன்றையும் உயிருடன் புலிகளைப் பிடிக்கப்ப பயன்பட்ட "கற்புலிப்பொறி" ஒன்றையும் கண்டுபிடித்தனர். அண்ணம ங்கலத்திலும் இதே போன்று ஒரு "புலி ப்பொறி"யைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. அண்ணமங்கலம் மலையைச் சுற்றி பல்வேறு இடங்களில் இந்த புலிப்பொறி அமைக்கப்பட்டுள்ளது.சுமார் ஒரு மீட்டர் உயரமும்இ 1.50மீட்டர் அகலமும்இ 20 செ.மீ கணமும் கொண்ட ஒரு கற்பலகையில் புலியொன்று ஒரு வீர இளைஞனை நோக்கி தன் வாலை உயர்த்திபின்கால்களை தரையில் நன்கு ஊன்றி முன்கால்களை மேலே உயர்த்தி ஆவேசமாக பாய்வது போலவும்இ புலிக்கும் வீரனுக்கும் இடையில் ஆடு ஒன்று புலியால் அடிக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும்படியும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அவ்வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாளால் அப்புலியின் முகத்தைத் தாக்குவதாகவும்இ தன் இடது கையை ஒரு குறுவாளை பிடித்தவாறு தொங்கவிட்டபடியும் செதுக்கப்பெற்றுள்ளான். புலி அவ்வீரனைக் கொன்றுவிட்டு தானும் மாண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியைக்கண்ட அப்பகுதிவாழ்மக்கள் வீரனின் தீரச்செயலின் நினைவாக "வீரக்கல்" நட்டு "நடுகல்" வழிபாட்டை பண்டு தொட்டு இன்றுவரை தொடர்;ந்து நடத்திவருகின்றனர். அவ்வீரனின் ஆடை அலங்காரமும்இ தலையணியான கொங்கனி என்றும், குல்லாயும்ஆட்டைக்காப்பாற்ற போராடிய திறனும், அங்கு காணப்படும் சுற்றுச் சூழலும், தற்போதைய மக்கள் மரபு வாழ்க்கையையும் ஆய்வுக்குட்படுத்துகையில் அப்பகுதியில் கோணார் இன மக்களும், தரைவாழ் பழங்குடியின மக்களும்பெருங்கூட்டமாக வாழ்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆய்வின்போது உள்ளுர் பொது மக்களாகிய சோழங்குணம் சின்னத்தம்பி, வெங்கிடேசன், ராமதாஸ் ஆகியோர் உடனிருந்து உதவினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago