கார்களில் தவறான எரிபொருள் நிரப்பி விட்டால் என்ன செய்வது?

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      மோட்டார் பூமி
petrol in deisel(N)

ஒரு சிறிய தவறு பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்து விடுவது இயல்புதான். தவறுதலாக பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பி இயக்கினால் என்ன ஆகும் ஆல்லது டீசல் எஞ்சினில் பெட்ரோல் நிரப்பினால் என்ன ஆகும். அவ்வாறு தவறு நேர்ந்துவிட்டால் என்னவாகும். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அடிப்படையாகவே சில வித்தியாசங்கள் இயல்பாகவே இருக்கின்றன.
பெட்ரோல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 246 டிகிரி செல்சியஸ் ஆகும். டீசல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 210 டிகிரி செல்சியஸ் ஆகும பெட்ரோல் உயவு தன்மையில் எவ்விதமான மாற்றங்ளும் எற்படாது. டீசல் உயவு தன்மை அதிகம். மேலும் குறைவான வெப்பநிலையில் உயவு தன்மை அதிகரிக்கும்.
1 லிட்டர் பெட்ரோலுக்கு 34.6 மெகாஜூல் கிடைக்கும்.
1 லிட்டர் டீசலுக்கு 38.6 மெகாஜூல் கிடைக்கும்.
பெட்ரோல் மிகவும் தூய்மையானதாக இருக்கும்.
டீசல் சற்று குறைவான தூய்மை மற்றும் பாகுதன்மையுடன் விளங்கும்.

பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பினால்

பெட்ரோல் எஞ்சின் ஆற்றலை வெளிப்படுத்த ஸ்பார்க் பிளக்கினை கொண்டு பெட்ரோல் எரிக்கப்படும். ஆனால் தவறுதலாக டீசல் நிரப்பபட்டால் முதல் கட்டமாக எரிபொருள் வடிகட்டிகளை பாதிக்கும். டீசலுக்கு உயவு தன்மை அதிகம் என்பதால் பம்புகளை பெரிதும் பாதிக்கும். மேலும் ஸ்பார்க் பிளக்கை பழுதடைய செய்யும். இதனால் எஞ்சின் மிக பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகும்.

டீசல் எஞ்சினில் பெட்ரோல் நிரப்பினால
டீசல் எஞ்சின் மிக அதிகப்படியான உயவு தன்மையில் இயங்கக்கூடியதாகும். ஆனால் பெட்ரோல் உயவு மிக குறைவு என்பதால் பம்புகள், இன்ஜெக்டர்கள், வடிகட்டிகள் என பலவும் பாதிக்கப்படும் மிக அதிகப்படியான செலவினை வைத்துவிடும். பெட்ரோல் எஞ்சினை விட டீசல் எஞ்சின் அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் செலவு வைக்கும்.

தீர்வு என்ன ?
தவறுதலாக சரியான எரிபொருளினை நிரப்பாமல் விட்டால் உங்கள் காரினை இயக்குவதனை தவிருங்கள். மேலும் நீங்கள் இயக்கி விட்டால் வாகனத்தின் புகை மற்றும் எஞ்சின் சத்தம் போன்றவற்றில் மிக பெரிய மாறுதல் தெரியும். எனவே எஞ்சினில் மாறுதல் தெரிந்தால் உடனே வாகனத்தை இயக்குவதனை தவிர்த்து சோதியுங்கள்.
முதலில் எரிபொருள் இனைப்பினை துன்டித்து விடுங்கள். மற்றும் எரிபொருளினை முழுமையாக நீக்கிவிட்டு எஞ்சினை சுத்தம் செய்ய வேண்டும். மிக அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கை அனுகி முழுதாக எஞ்சின் பாகங்களை சுத்தம் செய்வது அவசியம். அனைத்து முக்கிய எஞ்சின் பாகங்களை பழுது பார்த்தல் அவசியம்.

நிரப்பும் முன் தவிர்ப்போம
எரிபொருள் நிரப்புவதற்க்கு முன் நிரப்புபவரிடம் பெட்ரோல் அல்லது டீசலா என உறுதி செய்யுங்கள். மேலும் பெட்ரோல் அல்லது டீசல் என எரிபொருள் நிரப்புமிடத்தில் எழுதி வைக்கலாம

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: