சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுருபூஜை

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
DSC 0446

 

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுரு பூஜை மற்றும் சக்திமாலை இருமுடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு அதிகாலை 6 மணியளவில் ஸ்ரீகாளிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணியளவில் 42 அடி உயர ஸ்ரீவெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் மழை பெய்ய வேண்டியும், இயற்கையும், விவசாயமும் செழிக்க வேண்டியும், நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட வேண்டியும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற மும்மத பிரார்த்தனை சித்தர் பீடம் முன்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் காளிபராசக்தி தவசித்தர் பீடம் ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமி, சித்தர் தவகுரு பூஜைகள் நடத்தினார். இதில் மாலை அணிந்து இருமுடி கட்டி தாங்கி வந்த செவ்வாடை பக்தர்கள் காணிக்கைகள், நேர்த்திகடன்களை செலுத்தி அபிஷேகம் செய்து சித்தர் பீடத்தில் குரு தரிசம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 6.30 மணியளவில் சித்தருக்கு திருவிளக்கு பூஜை வழிபாடும், அன்னங்கள் படைத்து குருபூஜை வழிபாடும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் திருக்குமரன், கண்ணன் மற்றும் காளிபராசக்தி தவசித்தர் பீட செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: