முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் சேவல் சண்டை, கலை போட்டி : கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர், விளார் கிராமத்தில் தமிழர் பொங்கல திருநாளை முன்னிட்டு தென் மண்டல வீர விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் கால்போர் சேவல் கலைப்போட்டி (வெற்றுக்கால் சேவல் சண்டை) நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (11.02.2017) பார்வையிட்டார்.

 

சேவல் சண்டை

 

வெற்றுக்கால் சேவை சண்டையினை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் விளார் பகுதியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை நடைபெற்று வருகின்றது. இது நான்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து சுமார் 850 சேவல்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 30 களங்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கால்நடைத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையின் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கால்நடைத்துறை மூலம் அனைத்து சேவல்களும் சோதனை உள்ளாக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றது. இவ்விளையாட்டு போட்டி இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும். பாரம்பரியமான இப்போட்டிகளை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இப்போட்டியானது நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

பின்னர், சேவல் வளர்ப்போரிடம் சேவல் வளர்க்கும் முறை குறித்தும், உணவளிக்கும் விதம், சேவல் சண்டைக்கு சேவல்கள் தயார் செய்யும் முறை குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, துணை இயக்குநர் ராஜசேகரன், உதவி இயக்குநர் நெடுஞ்செழியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்