பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி தனித்திறன் போட்டிகளில் சாதனை

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
bharath

தென்காசி,

சிவகாசி, மெப்கோ பொறியியல் கல்லூரி சார்பாக, ரேடிக்ஸ் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி, சிவகாசி வொய்.ஆர்.டி.வி மெட்ரிக் பள்ளி, பாரத் வி;த்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி உட்பட்ட எண்ணற்ற பள்ளிகள் கலந்து கொண்டன. அதைத் தெடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் மாணவி கார்த்திகா பேச்சுப் போட்டியில் முதலிடமும் மாணவி பானுமதி கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடமும் மாணவி முத்துலட்சுமி ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும், மாணவன் கவின் டெரல் ஒவியப் போட்டியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தனர். அவ்வாறு முதல் மூன்று பரிசுகளையும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைப் பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: