முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோ-ஆப்டெக்ஸ் தங்கம் மாளிகை சார்பில் இளைய தலைமுறையினர் கைத்தறி ரகங்களை பற்றி அறிந்து கொள்ள கைத்தறி நெசவாளர் விழிப்புணர்வு சுற்றுலா

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      தர்மபுரி

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், இளைய தலைமுறையினர் பாரம்பரியமிக்க கைத்தறி இரகங்களை பற்றி அறிந்துக் கொள்ள கைத்தறி நெசவாளர் விழிப்புணர்வு சுற்றுலாவை தொடங்கியது. இவ்விழாவில் பலர் கலந்து கொண்டனர்.கோ-ஆப்டேக்ஸ் தங்கம் பட்டு மாளிகை வளாகத்திலிருந்து புறப்பட்ட கைத்தறி விழிப்புணர்வு விழாவில் பங்கேற்பாளர்களுக்கு பருத்தி இரக சேலைகளின் பாவு தோயும் விதம், அல்லு பிடிக்கும் விதம் மற்றும் சாயம் தோய்க்கும் முறைகளை அம்மாபேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டது. மேலும் மிகுந்த அக்கறையுடன் உபவேலைப்பாடுகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் தொழில் விபரங்கள் மற்றும் அவர்களின் சிரமங்களையும் அறிந்துக் கொண்டனர்.திருமலை திருப்பதி ஏழுமலையான் உடுத்தும் தூய பட்டு மற்றும் அசல் ஜரிகையால் ஆன மேல்சாத்து மற்றும் உத்திராயம் அதிக அகலம் அதிக நீளம் கொண்டதை இரண்டு நபர்கள் நெய்வதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். திருமலை திருப்பதி தெய்வத்திற்கு சாத்தப்படும் பட்டு இரக’;கள் கோ-ஆப்டெக்ஸ் மூலம் அனுப்பப்படுவதையும் அதன் பெருமையும் கண்டு வியந்தனர்.சேலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் வெண்பட்டு ஜரிகை பேட்டு வேட்டிகளின் உற்பத்தி ஐனெயைn ர்யனெடழழஅ டீசயனெ யுறயசன ஜனாதிபதியிடம் கோ-ஆப்டெக்ஸ பெற்ற மயில்கண் இரக வேட்டிகளின் உற்பத்தி, மற்றும் வெண்பட்டு உ~;ணா கண்டு மகிர்;ந்தனர். மேலும் இவ்ரக உற்பத்திக்கு பாரத பிரதமர் திரு.மோடி அவர்களிடம் இருந்து கோ-ஆப்டெக்ஸ் பாராட்டு பெற்றுள்ளது என்பதையும் தெரிவிக்கப்பட்டனர்.கைத்தறி பட்டு மற்றும் பருத்தி இரகங்களை தெரிந்துக்கொள்ள வனவாசி மற்றும் தாரம’;கலம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவற்றில் திரு.மாரி, வயது 87 அவர் கடந்த 75 ஆண்டுகளாக கைத்தறி நெசவு செய்து வருவதை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர். மேலும் ஒரு கைத்தறி புடவையை உருவாக்குவதற்கு ஒரு நெசவாளர் 12,000 முறை தன்னுடைய கைகால்களை அசைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இப்பெரியவரின் உடல் ஆரோக்கியத்திற்கு இதுவே காரணமாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு புடவை நெய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது என்றும் அதற்கு பெறும் கூலி மிகவும் சொர்ப்பமானது என்றும் கூறினார். இறுதியாக தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவிலுக்கு சென்று ஸ்வாமியை தரிசித்து பிறகு கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் உள்ள அனைத்து இரகங்களையும் கண்டு பார்வையிட்டு மகிழ்ந்தனர். சிலர் பருத்தி இரகங்களை 20மூ சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு பெற்றுக்கொண்டனர்.இவ்விழாவில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கைத்தறி ஆடைகளை அணிவோம் என்றும் எங்களால் முயன்ற வரை மற்றவர்களுக்கு நெசவாளர்கள் பற்றியும் கைத்தறி ஆடைகளை பற்றியும் எடுத்துக்கூறுவோம் என்று உறுதி கூறினார். ஒரு நெசவாளர் வாழ்வாதாரத்தை பற்றி அறிந்துக் கொண்டோம் எனவும் இந்த நல்ல ஏற்பாடு செய்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்