பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      சென்னை
che1

பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பில் கல்வி நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தெருக்கூத்து நாடகம் மூலமாகவும், பெருநகர சென்னை மாநகர் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் முழு சுகாதார தமிழகத்தை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

சென்னை பெருநகரம் முழுவதும் மண்டல சுகாதார அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களால் கோட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 200 பள்ளிகளில் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. முகாமில் முறையாக கைகளை சோப்பு போட்டு கழுவுவதின் மூலம் எவ்வாறு பெரும்பாலான தொற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இம்முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் முறையாக சோப்பு போட்டு கை கழுவினர்.


 

இதில் சிறப்பு நிகழ்வாக, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவிகளுக்கு சுகாதார கல்வி அலுவலரால் நோய்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, முறையாக கைகழுவுவது குறித்து செய்முறை விளக்கமும் செய்யப்பட்டது. அனைத்து மாணவிகளும் முறையாக கை கழுவினர். நோயின்றி நலமுடன் வாழ சாப்பிடும் முன்னரும், கழிவறைக்கு சென்று வந்த பின்பும் சோப்பு போட்டு முறையாக ஒவ்வொருவரும் கை கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை மாநகர் முழுவதும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பன்றிக் காய்ச்சல், கை கழுவும் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று விழிப்புணர்வு முகாம்கள் மற்ற அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநகர சுகாதார அலுவலர், மண்டல சுகாதார அலுவலர், தலைமையாசிரியை, ஆசிரியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: