அழகப்பா பல்கலைக்கழத்தில் தேசிய ஆற்றல பாதுகாப்பு தினம்

kari

 காரைக்குடி.-அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை, சுவச் பாரத் - சுவஸ்த் பாரத், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் ஆகியன இணைந்து “தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்” பல்கலைக்கழக அறிவியல் வளாக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமையுரையில், இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் இயற்கையால் கிடைக்கக் கூடிய காற்று, சூரிய வெளிச்சம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தாமல், செயற்கை உபகரணங்களான ஏ.சி.,காற்றாடி, மின் விளக்குகள் ,போன்றவற்றை உபயோகித்து அதனால் கிடைக்கக் கூடிய காற்று, வெளிச்சம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் சுகாதார கேடுகளுக்கு ஆளாவதோடு, எரிசக்தியையும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, மனிதன் இயற்கை அளித்துள்ள கொடைகளை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்றார். அதிக மக்கள் தொகை உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு எல்லாம் எரிசக்தி சேமிப்பு என்பது ஒருமிகப் பெரும் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் இருந்து நாம் எரிசக்தியை சேமிப்பது பற்றிய தணிக்கை மேற்கொண்டு, நம் நாட்டில் அந்த வகையில் சேமிப்பு வகைகளை மேற்கொண்டு எரிசக்தி பிரச்சினைகளைச் சமாளிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்ஆ. கோட்டை சாமி தமது முக்கிய உரையில் சமுதாயத்திற்கு நாம் அனைவரும் எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரியசக்தி, வெள்ளை நிற டுநுனு விளக்குகளையும், உயிரி எரிசக்திகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் கரிய மிலதடத்தைக் கட்டுப்படுத்தி சுற்றுச் சூழல்களை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சிமையத்தின் விஞ்ஞானி முனைவர்

  தமது சிறப்புரையில்;, எரிசக்தியை எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்ற வழிமுறைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார் .நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவரும் நம் நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, கிடைக்கக் கூடிய எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவும் ,சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஆற்றல் அறிவில் துறைத் தலைவர் முனைவர் ளு.கருப்பசாமி வரவேற்புரையாற்றினார். சுவச் பாரத் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. ராஜன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ