முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி காண்காணிப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

திருநெல்வேலி

,திருநெல்வேலி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூலம் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணைய உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசராகவன் , வழக்கறிஞர் ஆர்.ஜே.கார்த்திக், வழக்கறிஞர் ஜே.அசோக், வழக்கறிஞர் ஐ.பினாய்காஷ், வழக்கறிஞர் நவநீதராஜா ஆகியோர் இரண்டாம் நாளாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட்டுள்ளாத என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வழக்கறிஞர் ஆணையர் ஸ்ரீனிவாசராகவன்  மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல்  முன்னிலையில் மேலப்பாளையம் மண்டலம் வுஎள நகர் பார்க் பகுதி, உதயா நகர் பார்க் பகுதி, என்.ஜி.ஓ காலனி பார்க் பகுதி வெங்கடாத்திரி நகர் பார்க் பகுதி, ராமலிங்க நகர் பார்க் பகுதி, எல்.கே.எஸ் நகர் பார்க் பகுதி, பிக்பஜார் எதிர்புரம், மேல குலவணிகபுரம் தோப்பு புறம்போக்கு பகுதி, ஒச்சான்குளம் இரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் சீமை கருவேல மரம் வேருடன் அகற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். மேலும் ராஜகோபாலபுரம் குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை பார்வையிட்ட குழுவினர் உடன் அகற்றிட நடவடிக்கை எடுக்க அறிவுருத்தினர் மேலும் சீமை கருவேல மரங்கள் உள்ள தனியார் நிலங்களிலும் உடனடியாக அகற்றிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.இந்த ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர்கள் ஆதிமூலம், ரமேஷ், உதவி ஆணையர் சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, பாஸ்கர், திருநெல்வேலி வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பாலசந்திரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago