முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொன்போஸ்கோ கல்லூரி அதியன் தமிழ் மன்றம் தமிழ்த்துறை சார்பில் பட்டிமன்றம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி அதியன் தமிழ் மன்றம் சார்பாக பட்டிமன்றம் நடைபெற்றது. அதியன் தமிழ் மன்றத்தின் தலைவர் பேராசிரியருமான முனைவர் க. பாலாஜி வரவேற்றார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.சு.மரியசூசை,ச.ச அவர்கள் வாழத்துரை வழங்கினார். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி அறிவினைத் தருகிறதா? அழிவினைத் தருகிறதா? என்னும் பொருண்மையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தில் முதுகலைத் தமிழ் இலக்கிய இரண்டாமாண்டு மாணாக்கர்கள் செல்வன்.கி.மாரியப்பன், ராஜ்குமார், நவீன்குமார், செல்வி. டான்சிராணி ஆகியோரும் முதலாமாண்டு மாணாக்கர்கள் செல்வன். லோகேஷ்பச்சியப்பன், செல்வி.பச்சியம்மாள் ஆகியோரும் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழ்த்துறை பேராசிரியரும் மற்றும் கூடுதல் துணை முதல்வருமான மா. பெரியசாமி அவர்கள் இப்பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பொறுப்பேற்று இரு அணிக்கும் சார்பாகத் தீர்ப்பு வழங்கினார். நிகழ்வின் இறுதியாக பேராசிரியர் முனைவர் ஆ.சு.ராசா அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்காக ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைத் தலைவர் ஜோ. நெல்சன் அவர்களுடன் இணைந்து துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்