திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் கிராமப்புற நுகர்வோர்களுக்கான பயிற்சி

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      கடலூர்

குறிஞ்சிப்பாடி.

 

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுதில்லி மற்றும் சென்னை கான்சட் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைந்து நடத்தும். கிராமப்புற நுகர்வோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.மேலும் இப் பயிற்சியில் பாதுகாப்பான உணவு,தூய்மையான குடிநீர்,தரமான மருந்து, அழகு சாதனா பொருட்கள் ஆகியவை லேபில் மற்றும் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. மேலும் மாணவர்கள் கொண்டுவந்த உணவு மற்றும் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பயிற்சியில் விவாதிக்கப்பட்ட முக்கிய தலைப்புகளின் தொகுப்பு கையேடு பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.மேலும் பயிற்சிச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் கதிர்வேல் துவக்கவுரை ஆற்றினர். கல்லூரி நிர்வாககுழு தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் த.ராமலிங்கம் மட்டும் புல முதல்வர் ந.சேரமான் ஆகியோர் சிறப்புரையாற்றினார். குறிஞ்சிப்பாடி சிறப்பு தாசில்தார் செம்மானசெல்வி.கிருஷ்ணசாமி பொறியில்கல்லூரி ஜி.பாலகிருஷ்ணன். பேராசிரியர் அ.பாலசுப்ரமணியன் ஆகியோர் நுகர்வோர் பயிற்சி துவக்கவுரையாற்றினர். சந்தானராஜன், நுகர்வோர் இயக்குனர் நாராயணன் ஆகியோர் விளக்கவுரை யாற்றினார். நிர்வாக இயக்குனர் ஸ்கோப் நன்றியுரையற்றினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: