முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்திலுள்ள 540 விவசாயிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பயிர்க் கடனுதவிகள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் 540 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பிலான விவசாய பயிர்க்கடன்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களும் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களும் வழங்கினார்கள்.இவ்வாய்வு கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்களிடையே கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசியதாவது:-மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு நல்ல பல திட்டங்களை கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் விவசாயிகளிடம் முழுமையாக சென்றடைவதற்கு முக்கிய காரணம் கூட்டுறவுத் துறை அலுவலர்களான உங்களுடைய சிறந்த உழைப்பே ஆகும். பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா உணவுப் பொருட்கள் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி சென்றடைய வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 2011 முதல் 2017 வரை 3 இலட்சத்து 53 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1605.93 கோடி தொகையிலான பயிர்க்கடன்களை வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் நம்முடைய மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசுதான் முதன்முதலாக விவசாயிகளுக்கு இதுபோன்ற பயிர்க்கடன் திட்டத்தை வழங்கியுள்ளது. இப்போதுதான் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா நம்முடைய திட்டங்களை பின்பற்ற தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் மிகவும் நலிவடைந்து செயல்பட்டு வந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விஷயமாகும். ஆகவே கூட்டுறவு துறை அலுவலர்களான நீங்கள்தான் ஏழை எளியோருக்கும் விவசாயிகளுக்கும் அரசின் திட்டங்கள் எந்தவொரு இடர்பாடும் இன்றி சென்றடையும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு என்று தெரிவித்துக் கொண்டு ஒவ்வொரு வட்ட அளவில் உள்ள கடன் சங்கங்கள், பல்பொருள் அங்காடிகள், அம்மா மருந்தகம், பண்ணை பசுமை அங்காடிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், கருத்துக்களையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.இக்கூட்டத்திற்கு முன்னதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வேலூர் மாநகரில் இயங்கி வரும் கற்பகம் கூட்டுறவு விற்பனை நிலைய அங்காடிக்கு சென்று அங்கு விற்கப்படும் அனைத்து விதமான பொருட்களின் தரம், விற்பனை மற்றும் தமிழக அரசின் அம்மா உப்பு, ஊட்டி டீ, போன்ற பொருட்களையும் ஆய்வு செய்து அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்து பொது மேலாளரிடம் கேட்டறிந்தார்.பின்னர் வேலூர் மாநகரில் அமைந்துள்ள கூட்டுறவுத் துறையின் அச்சகத்தை நேரில் சென்று பார்வையிட்டு அச்சகத்தில் பிரிண்ட் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அலுவலர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கேட்டறிந்தார். பின்னர் காட்பாடி காந்தி நகரில் காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு பண்டக சாலையின் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிக்கு நேரில் சென்று அங்குள்ள காய்கறிகளின் தரம் மற்றும் விலைப்பற்றி அலுவலரிடமும், பின்னர் நுகர்வோரிடம் அங்காடி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றது என்று நேரடியாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கேட்டறிந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்