நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது:கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகள். பேரூராட்சிகள், நகராட்சி, பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் சாலை ஓரங்கள், பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்றிட மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது குளங்கள், குட்டைகள், ஏரிகளில் உள்ள சீமை கருவேல் மரங்களை அகற்றிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.  சீமை கருவேல் மரங்களால் பின்வரும் கேடுகள் விளைகின்றன.            நிலத்தடி நீரை இது விஷமாக மாற்றுகிறது.                மழை பெய்யாது போனாலும், நிலத்தில் நீர் இல்லாமல் போனாலும் சீமை கருவேல் மரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்,  ஆனால் பூமி வறண்டு விடும்.            சுற்றுப்புற காற்று மண்டலத்தை நச்சுத்தன்மை உடையதாக மாற்றி விடும்.   நீர் இல்லாத போது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.இவ்வாறாக, பொதுமக்களுக்கு கேடு விளைவிப்பதுடன், சுற்றுப்புறத்தையும் பாழாக்குவதுடன், நீர் நிலைகளில் உள்ள தண்ணீரையும், நிலத்தடி நீரையும், முற்றிலுமாக உறிஞ்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையினை சீமைக் கருவேல் மரங்கள் உருவாக்கும்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக் கருவேல் மரங்களையும் முழுவதுமாக அகற்றிட வேண்டுமென பல்வேறு வழக்குகள் மாண்பமை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, மாண்பமை மதுரை உயர்நீதிமன்றத்தில் சீமைக் கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டுமெனவும் உத்திரவுகள் பிறப்பித்துள்ளது.     நாமக்கல் மாவட்டத்தில் குளங்கள், குட்டைகள், ஏரிகள், பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றி வரும் நிலையில், ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை நிலத்தின் உரிமையாளர்களே அகற்றிடும் வகையில் ஏற்கனவே ஊரக மற்றும் நகர்புற அமைப்புகளின் அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டும் வருகிறது.                எனவே, உங்களுடனே வசித்து வரும் உங்கள் மக்களின் நலன் காத்திடவும். நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் உறிஞ்சப்படுவதையும், நிலத்தடி நீர்மடடம் குறைந்து வருவதையும் தடுத்திடவும், நாமக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையினை கட்டுக்குள் வைத்திடவும். பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலுமாக விரைவில் அகற்றி பொதுமக்களுக்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பினையும் நல்கி நாமக்கல் மாவட்டத்தினை 100மூ சதவீதம் சீமை கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட மாவட்டமாக மாற்றிடும் முயற்சியில் இணைந்திடுமாறு நில உரிமையாளர்கள் அனைவரையும் நாமக்கல் கலெக்டர் கேட்டுக் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: