முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க்கைத்திறன் கல்வியை கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத பெண்களாக மாற வேண்டும் பயிற்சி முகாமில் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

  ஒட்டன்சத்திரம்.-திண்டுக்கல் மாவட்டம், ஹோப் தையல் மையத்தில் ஹோப் குழந்தை உரிமை ஆதரவுக்குழு மற்றும் கோவை அக்கறை அறக்கட்டளை இணைந்து ரோசியல் திட்டத்தின் மூலம் பயிற்சிபெறும் இளம்பெண்களுக்கு சமூகநலக் கல்வி பயிற்சி வழங்கப்பட்டது. இம்முகாமிற்கு ஹோப் நிறுவனத்தின் இயக்குனர் என்.பழனிச்சாமி தலைமை வகித்து, பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் மன அழுத்தத்தின் காரணமாக தவறான முடிவுகள் எடுக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள இம்மாதிரியான பயிற்சிகள் அவசியம் என்பது குறித்து பேசினார்.
இம்முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் குழந்தைகள் செயல்பாட்டு மைய ஆசிரியர் எம்.ர~;சிதா வரவேற்று பேசினார்.

            முகாமில் கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பி.சாம்சன் பங்கேற்று பயிற்சி பெற வந்த இளம் பெண்களுக்கு சமூக நலக்கல்வி குறித்து விழிப்புணர்வு, விளையாட்டின் மூலம் மன ஆற்றுப்படுத்துதல் சம்மந்தப்பட்ட விசயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு பெண்களும் வாழ்க்கை திறன் கல்வியை கற்றுக்கொண்டு, மன அழுத்தம் இல்லாத பெண்களாக மாற வேண்டும் என பேசினார்.
முகாமில் ஹோப் நிறுவன அமைப்பாளர்கள் எம்.மகாலட்சுமி, பி.மேனகா மற்றும் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் 100 இளம் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் குழந்தைகள் செயல்பாட்டு மைய குழந்தைகளுக்கு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. முடிவில் ஹோப் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அலுவலர் ஏ.பேபிராணி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்